Ad Widget

சின்னவிடயத்திற்காக இனவாதம் பேசாதீர்கள் – சமன்சிகேரா

policeவாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாண பொலிஸ் தலமையத்தில் இன்று இடம்பெற்றது.இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் வீதிப்போக்குவரத்துப் பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம் வழங்குவதற்கான பற்றிச்சீட்டு சிங்கள மொழியில் காணப்படுவதனால் சாரதிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அதனை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் வழங்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு பதிலளிக்கையில்..

தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் இலங்கையின் தேசிய மொழியாக உள்ளது. எனவே தமிழ் அல்லது சிங்கள மொழியில் பற்றுச்சீட்டு வழங்குவது தவறில்லை.

அதற்கும் மேலாக பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிஸ் பற்றாக்குறையாக உள்ளது. தற்போது கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தமிழ் பொலிஸார் முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கைக்கே அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதனால் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவில் தமிழ் பொலிஸார் இல்லை. அதன்காரணத்தினாலேயே சிங்கள மொழியில் எழுதப்பட்டு வழங்கப்படுகின்றது.

இதேவேளை, தமிழ் தெரியாத நாங்களும் உங்களுக்கு சேவையினை ஆற்றிவருகின்றோம். எவ்வாறாயின் நாங்கள் உங்களது பிரச்சினைகள் மற்றும் கூற விரும்பவதை மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் தெரியப்படுத்துகின்றோம். அதேபோல சிங்கள மொழியில் எழுதப்பட்டவற்றை விளங்கிக் கொள்ள முடியாத விடத்து சிங்களம் தெரிந்தவர்களிடம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த சிறிய விடயத்தை வைத்துக் கொண்டு இனவாதம் பேச வேண்டாம் நாங்கள் எல்லோரும் ஒன்று தான். இருப்பினும் எல்லாளன் காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் மொழிப்பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts