Ad Widget

‘சித்திரவதைக் கருவிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா’

உலகெங்கிலும் பொலிஸ்படைகள் ஆட்களை சித்திரவதை செய்வதற்குப் பயன்படுத்தும் கருவிகளை தயாரித்து ஏற்றுமதி செய்வதாக சீனக் கம்பனிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

tools_of_torture_china

கிட்டத்தட்ட 130 கம்பனிகள், பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான கம்பனிகள் முட்கள் கொண்ட உலோகத் தடிகள், பெருவிரல்களைப் பூட்டும் விலங்குகள், கழுத்தையும் கைகளையும் சேர்த்துக்கட்டும் கருவிகள் போன்ற சித்திரவதை ஆயுதங்களை தயாரிப்பதாக அம்னஸ்டி இண்டர்நேஷனல் கூறுகின்றது.

சில கருவிகள் பொலிசாரின் சட்டரீதியான தேவைகளுக்குப் பயன்பட்டாலும் மற்றவை கொடூரமான சித்திரவதைகளுக்கே பயன்படுபவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் மோசமான மனித உரிமைச் சூழலைக் கொண்டுள்ள நாடுகளே பெரும்பாலும் இந்த கருவிகளை வாங்குவதாகவும் அம்னஸ்டி இண்டர்நேஷனல் கூறுகின்றது.

Related Posts