சாவகச்சேரி பேருந்து நிலைய நினைவுக்கல் இனந்தெரியாத விஷமிகளால் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் 2011 ஆண்டு காலப்பகுதியில் குறித்த பேருந்து நிலையம் புதுப் பொலிவுடன் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டிருந்தது

அதற்கு சான்றாக அங்கு நினைவுப் படிகம் ஒன்றும் அமைக்பப்பட்டிருந்த நிலையில் அந்த வரலாற்றை இல்லாதொழிக்கும் வகையில் சில விஷமிகள் சுயலாப அரசியலின் தூண்டுதலை அடுத்து நினைவுப் படிகம் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
விஷமிகளின் இந்த செயலுக்கு சமயத் தலைவர்கள் கல்விமான்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தமது கண்டனத்தையும் விசனத்தையும் தெரிவித்துவருகின்றனர்.
கடந்த 2011. மார்ச் 05ஆம் திகதி குறித்த பேருந்து நிலையம் அன்று அமைச்சராகவும் இன்றையா நாடாளுமன்ற உறுப்பினருமான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலானளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.