Ad Widget

சாவகச்சேரியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கைது ! நடந்ததென்ன?

1981 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சட்டம் வீட்டிற்கு வீடு சென்று வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதை தடுக்கின்றது (ஆதரவாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை இல்லை). அத்தோடு பொது இடங்களிலும் பிரச்சாரம் செய்வதை தடுக்கின்றது. ஆனால் அண்மையில் கட்சிகள் யாவற்றினதும் சம்மதத்துடன் மக்களுக்கு இடையூறு இல்லாமல் பொது இடங்களில் பிரச்சாரம் செய்வதை அனுமதிக்கும் அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.

இன்று சாவகச்சேரியில் வேட்பாளர் சிவகுமாரன் உட்பட உட்பட முன்னணியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். கூட்டமைப்புக்காரர் இது தொடர்பில் CAFFE அமைப்பைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு முறைப்பாடு செய்து அவர்கள் இது தொடர்பில் பொலிசுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்ய முயற்சிக்க அவ்விடத்திற்கு விரைந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்ட நிலையை பொலீசுக்கு விளங்கப்படுத்தினார். பொலீசார் அவ்விளக்கத்தை ஏற்கவில்லை; சண்டித்தனம் காட்டினர்; சிவகுமாரன் உட்பட பலரை கைது செய்தனர். கச்சேரிக்கு சென்று தேர்தல் ஆணையாளரின் அறிவித்தலின் சிங்கள பிரதி கொண்டு வந்து கொடுத்த பின்னர், SSP யின் தலையீட்டின் பின்னரும் பொலீஸ் நிறைந்த தாமதத்தின் பின்னரே கைது செய்தவர்களை விடுதலை செய்தது. வேட்பாளர் சிவகுமாரன் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. பொலிஸ் பிணையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

Related Posts