சாட்டியில் மீட்கப்பட்டவர் அடையாளர் காணப்பட்டார்

யாழ்ப்பாணம் மண்கும்பான் சாட்டி கடற்கரையில் நேற்று காலை மீட்கப்பட்ட சடலம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.

body_women_01

சாட்டி கடற்கரையில் நேற்று அதிகாலை பெண்ணொருவருடைய சடலம் கரையொதுங்கியிருந்தது.அதனை அவதானித்த பிரதேச வாசிகள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சடலம் மீட்கப்பட்டது.

தகவல் அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை அடையாளம் காட்டினர். அதன்படி பண்டத்தரிப்பை சேர்ந்த 35 வயதுடைய மரியதாஸ் அன்ரனி மேரிரொரேற்றா என அடையாளம் காணப்பட்டது.

இதேவேளை, சடலத்திற்கு அருகில் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் குறித்த பெண் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts