Ad Widget

சர்வதேச விசாரணை கோருவதில் சவால்கள் – ஸ்டீபன் ஜே. ரெப்

Stepan Je Rebசர்வதேச விசாரணையைக் கோருவதில் சில சவால்கள் இருப்பதாக யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த அமெரிக்காவின் போர்க்குற்ற நிபுணர் ஸ்டீபன் ஜே. ரெப் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் போர்க் குற்ற நிபுணர் ஸ்டீபன் ஜே. ரெப் நேற்று மதியம் A9 பாதை வழியாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். அவருடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே சிசன் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் விவகார அதிகாரிகள் ஆகியோரும் வருகை தந்தனர்.

இவர்கள் கிறீன் கிறாஸ் விடுதியில் வடபகுதிச் சிவில் சமூ கத்தினரைச் சந்தித்திருந்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமான விசாரணையை இலங்கை அரசு செய்யும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே சர்வதேச விசாரணை அவசியம்என்று அவர்கள் வலியுறுத்தினர்.

காணமற்போனவர்கள் தொடர்பிலான ஒரு பெயர்ப் பட்டியலும் ஸ் ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்டது. அத் துடன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட காணமற் போனவர்கள் தொடர்பிலான விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை எனவும், வேறு வழியில்லாமலேயே அந்த ஆணைக் குழுவுக்குத் தகவல் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காணமற்போனவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே தேவை என்றும் இதில் வலியுறுத்தப்பட்டது.

இலங்கை மீது சர்வதேச விசாரணையை முன்வைப்பதற்கும் அதனை நோக்கி நகர் வதற்கும் இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று ஸ் ரீபன் ராப் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதற்குச் சிவில் சமூகப் பிரதிநிதிகள், சூடானிய அரசு கேட்டா அங்கு நீங்கள் போர்க்குற்ற விசாரணை செய்தீர்கள்?ஏனைய நாட்டு அரசுகள் கேட்டா நீங்கள் அங்கு போர்க்குற்ற விசாரணை செய்தீர்கள்? என்று அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த ஸ்டீபன் ஜே. ரெப், சர்வதேச விசாரணை கொண்டு வருவதில் சில சவால்கள் இருக்கின்றன.

ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும்.மேலும் கடுமையான பிரேரணையை முன்வைத்தால் சில நாடுகள் பிரேரணைக்கு ஆதரவளிக்காமல் போய்விடும். ஆதனால் அது தோல்வியடைந்து விடும் என்றார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் நேற்று மாலை வடக்கு மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனையும், வடக்கு முதல்வரையும் தனித்தனியாக சந்தித்துக்கலந்துரையாடினார் ஸ்டீபன் ஜே. ரெப்.

தொடர்புடைய செய்தி

காணாமற்போனோர் தொடர்பிலான தீர்க்கமான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கவேண்டும் – அனந்தி

Related Posts