Ad Widget

சர்வதேச சமூகத்தின் கவனத்தினை ஈர்க்கவேண்டும் – சிவாஜிலிங்கம்

sivajilingam_tna_mpகாணி சுவீகரிப்புக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மக்கள் போராட்டம் மூலமே சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்து காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த முடியும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று திங்கட்கிழமை (07) தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கீரிமலை, சேந்தான்குளம் மற்றும் திருவடிநிலை ஆகிய பகுதிகளில் 127 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் இன்று திங்கட்கிழமை (07) காலை காணி அளவீடு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மாகாண சபை, பிரதேச சபை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘வடக்கிலே பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் சுவீகரிக்கபட்டு இராணுவ முகாம்கள் அமைக்க உள்ளதுடன் சிங்களக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

வலி.வடக்கு சேந்தாங்குளம் ஆரோக்கியநாதர் தேவாலயம் அமைந்துள்ள காணியை கூட இன்று கடற்படையினருக்கு முகாம் அமைக்கும் நோக்குடன் சுவீகரிக்க முயற்சிகளை மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு மத வழிபாட்டுதலம் அமைந்துள்ள காணியையே கடற்படை முகாம் அமைக்கும் நோக்குடன் சுவீகரிக்க முயல்கின்றனர். இவ்வாறான காணி சுவீகரிப்புக்களுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும்.

சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்தால் தான் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த முடியும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமிழ்மக்கள் அனைவரும் போராட வேண்டும் – கஜேந்திரன்

காணி சுவீகரிக்கும் நோக்கில் இடம்பெற்ற நிலஅளவை பணிகள் இடைநிறுத்தம்!

Related Posts