Ad Widget

சம்பந்தனால் மட்டுமே தீர்வு: தயா மாஸ்டர்

thaya-masterஇனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் மட்டுமே தீர்வு காண முடியுமென்று விடுதலை புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளரும் வட மாகாணத்துக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமாகிய தயா மாஸ்டர் நேற்றய தினம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘மூத்த தமிழ் அரசியல்வாதியும், அரசியல் அநுபவமிக்கவரும், பல்வேறுபட்ட அரசியல் ஒப்பந்தங்களின் போது, உடனிருந்தவர் என்ற வகையில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு பங்களிப்பு செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு உள்ளது’ என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்லில் வெற்றி பெற்றால், இணங்கிய அரசியலில் ஈடுபட போவதாகவும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, முன்னாள் போராளிகளின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுவதுடன், போராளிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்பதையே வலியுறுத்தியுள்ளதாகவும்’ அவர் கூறினார்.

அத்துடன், ‘எமது சக்திக்கு அப்பால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல் உரிமைகள் உட்பட இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதேவேளை, 13ஆவது திருத்தத்தில் மாற்றம் வரப்போவதில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘விடுதலைப் புலிகளின் தனிநாடு கோரிக்கை எப்போதும் சாத்தியப் படப்போவதில்லை. அது அழிந்து விட்டதென்றும், இணக்க அரசியல் நடத்தப் போவதில்லை, இணங்கிய அரசியல் நடத்தப் போவதாக’ அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts