Ad Widget

சமாதான முன்னேற்றத்திற்கு 13 அவசியம்: யாழ். ஆயர்

australia_flag-01சமாதானத்தின் முன்னேற்றத்திற்கு 13ஆவது திருத்தச் சட்டம் அவசியமானது. 13ஆவது திருத்தத்தை வைத்துக்கொண்டு வடக்குத் தேர்தலை நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்’ என்று யாழ் ஆயர் தோமஸ்சௌந்தர நாயகம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான ஆலோசகர் மைக்கேல் கில்மனைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் ஆயரைச் சந்தித்த ஆலோசகர் மைக்கேல் கில்மன், ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?’ என்று ஆயரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஆயர், ‘கத்தோலிக்க ஆயர் சங்கமானர் 13ஆவது திருத்தம் நிற்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. அது மக்களின் முன்னேற்றத்திற்கும் சமாதானத்திற்கும் அவசியமானதாகும்.இதனை வைத்துக்கொண்டு வடக்கின் தேர்தலை அரசாங்கம் நடாத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

அத்துடன், ‘மீள்குடியேற்றங்கள் நடைபெற்றாலும் அது இன்னமும் முழுமையடையாத நிலையில் தான் காணப்பட்டு வருகின்றது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வாழ்வாதரா உதவிகள் மக்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை இதனால் மக்கள் தொடந்தும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்’ என்று ஆயர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ‘தற்போது மக்களின் வாழ்விடங்கள் மற்றும் காணிகள் அரசாங்கம் பாதுகாப்பு தேவைக்கென்று சுவீகரித்து வருகின்றது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு கவலை உணர்வு ஏற்பட்டுள்ளது.

வடக்கின் தேர்தலை அரசாங்கம் நடத்துமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் உள்ளது. வடக்கில் மூன்றில் 2 சதவீதமளவில் இராணுவம் குறைக்கட்டுள்ளதாக தெரிவித்த போதும் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவில்லை’ என்றும் அவுஸ்திரேலிய பிரதிநிதியிடம் யாழ். ஆயர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி

புகலிடக் கோரிக்கையாளர்களின் சட்டவிரோத படகுப் பயணம் வருந்தற்குரியது: ஆஸி.பிரிதிநிதி

Related Posts