Ad Widget

சமய வணக்கஸ்தலங்கள் அமைப்பதை கண்காணிக்க புதிய சுற்றுநிரூபம்

Nimal-siripalaசமய குரோத உணர்வுகளை தடுக்கும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாக நாட்டில் சமய வணக்கஸ்தலங்கள் அமைப்பதை கண்காணிப்பதற்கான ஒரு புதிய சுற்றுநிரூபத்தை அரசாங்கம் விடுத்துள்ளது என அவைத்தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு விடப்பட்ட சுற்றறிக்கைக்கு மேலதிகமாக இந்த சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

சமய வணக்க ஸ்தலங்களை அமைப்பதை கண்காணிக்கவென ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. இதில் பௌத்த,இஸ்லாமிய,இந்து மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கு பொறுப்பான திணைக்களங்களின் பணிப்பாளர்கள் அங்கத்தவர்களாக இருப்பர்.

சமயம் தொடர்பான பதற்றத்தை தீவிரவாக சக்திகள் தூண்டிவிடுவதை நிறுத்துவதே எமது நோக்கமாகும் என்றும் அவர் சொன்னார்.

பெரிய அனர்த்தமாக வெடிக்கும் முன்னர் சமய உணர்வால் உண்டாகும் பதற்றத்தை தணிப்பதற்கு எதிர்க்கட்சியினரும் உதவவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Posts