Ad Widget

சம­ரச முயற்­சிக்­குப் பங்­கம் ஏற்­ப­டுத்­த­மாட்­டார் விக்கி : மாவை நம்­பிக்கை

நாங்­கள் மக்­கள் முன்­னால் பிள­வு­பட்டு நிற்க முடி­யாது. அதற்­கா­கவே சம­ரச முயற்சி ஆரம்­பிக்­கப்­பட்­டது. சம­ரச முயற்­சிக்­குப் பங்­கம் ஏற்­ப­டா­மல் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன் நட­வ­டிக்கை எடுப்­பார் என்று நம்­பு­கின்­றேன். இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அமைச்­சர்­கள் நிய­ம­னம் மேற்­கொண்­டமை தொடர்­பில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் நிலைப்­பாடு என்ன என்று கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்­தார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது:

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் என்னை வந்து சந்­தித்­த­போது, திரு­மதி அனந்தி சசி­த­ர­னுக்கு அமைச்­சுப் பதவி வழங்­கப் போவ­தா­கக் கூறி­னார். அவர் கட்சி ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்கு உட்­பட்­டி­ருப்­ப­தால் அதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­தேன்.

மறு­நாள் தொலை­பே­சி­யூ­டா­கத் தொடர்பு கொண்டு, அனந்­திக்கு மக­ளிர் விவ­கா­ரத்தை வழங்­கப் போவ­தா­கத் தெரி­வித்­தார். கட்­சிப் பொதுச் செய­லர் மற்­றும் ஏனை­யோ­ரு­டன் பேசிப் பதி­ல­ளிப்­ப­தா­கக் கூறி­னேன்.

அதன் பின்­னர் நாம் கூட்­டம் நடத்தி, எமது கட்சி சார்­பில் இ.ஆர்­னோல்ட்­டுக்கு அமைச்­சுப் பதவி வழங்­கு­மாறு பரிந்­து­ரைத்­தோம். அவர் இப்­போது அமைச்­சர்­களை நிய­மித்­துள்­ளார். எதிர்­கால விட­யங்­கள் தொடர்­பில் பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.

நான் ஏற்­க­னவே பத்­தி­ரி­கை­க­ளுக்­குக் கூறி­யதை மீண்­டும் கூறு­கின்­றேன். நாங்­கள் அமைச்­சுப் பத­வி­க­ளுக்­குப் போட்­டி­யிட்­டுக் கொண்டு, எமது மக்­க­ளின் விடு­த­லையை, அர­சி­யல் தீர்வை தவ­ற­விட முடி­யாது. எங்­கள் மக்­கள் முன்­னால் நாங்­கள் பிள­வு­பட்டு நிற்க முடி­யாது. இதற்­கா­கவே சம­ரச முயற்சி ஆரம்­பிக்­கப்­பட்­டது. அந்­தச் சம­ரச முயற்­சிக்­குப் பங்­கம் ஏற்­ப­டா­மல் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் நட­வ­டிக்கை எடுப்­பார் என்று நம்­பு­கின்­றேன் – என்­றார்.

இதே­வேளை, இந்த விட­யம் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு, கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் எழு­திய இரண்­டா­வது கடி­தத்­தில், முத­ல­மைச்­சர் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் ஆலோ­சிக்­கா­மல் செயற்­ப­டு­கின்­றார் என்­ப­தைக் குறிப்­பிட்­டி­ருந்­தார். கட்­சித் தலை­வர் மாவை.சேனா­தி­ரா­சா­வும் அதே விட­யத்­தைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார். தற்­போது அவற்றை நிரூ­பிக்­கும் வகை­யில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் செயற்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றார் என்­றார்.

Related Posts