Ad Widget

சட்டமா அதிபர் யாழ். விஜயம்

இலங்கையின் சட்டமா அதிபர் பாலித சரத் பெர்ணாண்டோ யாழ்ப்பாணத்துக்கு நேற்று வியாழக்கிழமை (25) விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைசர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

2(3970)

சட்டமா அதிபர் அதிபருடன் கலந்துரையாடிய விடயங்களை, உடல்நலக்குறைவால் கூறமுடியாதிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு சென்ற சட்டமா அதிபர், காலையில் யாழப்பாண நீதிமன்றம் மற்றும் யாழ். பொதுநூலகம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்தார்.

யாழ். நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளை சட்டமா அதிபர் சந்தித்த போது, குற்றப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை மொழிபெயர்ப்பதில் சிக்கல் நிலைகள் காணப்படுவதாகவும் இதனால் வழக்குகள் காலதாமதமாவதாகவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினார்கள்.

அதாவது, பொலிஸாரால் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரங்கள் சிங்களத்தில் இருப்பதனால் மொழிபெயர்ப்பு செய்வதற்கு சிரமங்களை எதிர்நோக்குவதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் குற்றப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை மொழி பெயர்ப்பதற்கான மொழி பெயர்ப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் இதன்போது உறுதியளித்தார்.

Related Posts