Ad Widget

சக்கோட்டை கருவாடு பதனிடும் நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை

Karuvadu-fishவடமராட்சி கிழக்கு சக்கோட்டைப்பகுதியில் இயங்காது இருந்த கடுவாடு பதனிடும் நிலையத்தினை மீண்டும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ. எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் இடம்பெற்று வந்த காலப்பகுதியில் சக்கோட்டைப்பகுதியில் கருவாடு பதனிடும் நிலையம் அமைக்கப்பட்டு அங்கு கருவாடு பதனிடப்பட்டது. எனினும் போக்குவரத்து தடைப்பட்டு இருந்தமையினால் கருவாட்டை ஏற்றுமதி செய்ய முடியாதிருந்தது.

மேலும் கருவாடு பதனிடுவதற்கு வேண்டிய இயந்திரங்களை இயக்குவதற்கான ஆட்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இல்லாது இருந்தது.

இதன் காரணமாக குறித்த நிலையம் தொடர்ந்து இயங்கமுடியாது மூடப்பட்ட நிலையில் இன்று வரை உள்ளது.

தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கத்தினர் குறித்த கருவாடு பதனிடும் நிலையத்தினை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதனடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த தொழிற்சாலை மீளவும் ஆரம்பிக்கப்பட்டால் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் வருமானத்தை ஈட்டிக்கொள்வதுடன் வேலைவாய்ப்பினையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

இதேவேளை, வடபகுதியில் தற்போது இயந்திரமுறைகள் இல்லாத பாரம்பரிய முறைகளில் மாத்திரமே கருவாடு பதனிடப்பட்டு வருவதுடன் தொழிற்சாலை என்ற ரீதியில் வேறு மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts