Ad Widget

கோவிட்-19 நோயாளிகளை வீட்டில் பராமரிப்பது பற்றி மருத்துவ வல்லுநரின் விளக்கம்!

கோவிட்-19 நோயாளிகளில் ஆபத்துக் குறைந்தவர்களை வீட்டிலேயே வைத்து பராமரிப்பதற்கான 14 நாள்கள் திட்டம் மருத்துவர்களினால் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த தகவலை இலங்கை மருத்துவ சங்கத்தின் உறுப்பினர், மருத்துவ வல்லுநர் மல்காந்தி ஹல்கென தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது;

வீடுகளில் கோவிட்-19 நோயாளிகளை கண்காணிக்க மருத்துவ குழுக்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன.

ஒரு நோயாளி பராமரிப்பு சேவையில் அனுமதிக்கப்பட்டவுடன், பயிற்சி பெற்ற மருத்துவர் நோயாளிக்கு நியமிக்கப்படுவார்.

நோயாளியின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன ஆரோக்கியமும் வாழ்க்கை நிலமைகளும் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

ஒரு தனி அறை மற்றும் மலசலகூடம் கிடைக்கவில்லை என்றால், குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு நோயாளி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்.

நோயாளிக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில்
அம்புலன்ஸ் சேவைகளும் கிடைக்கும்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு வீட்டில் ஒக்ஸிஜன் செறிவின் அளவை கணக்கிட நோயாளி ஒக்சிமீட்டரைப் பயன்படுத்தலாம்.

ரூபாய் 3,000-5,000 வரை தரமான ஒக்சிமீட்டரை பொதுமக்கள் வாங்கலாம். நடுத்தர வசதியுடைய நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் இந்த வசதி உள்ளது.

பல்ஸ் ஒக்சிமீட்டரைப் பெற இயலாத நோயாளிகள் 40 நிமிடங்கள் நடந்து, சோர்வு ஏற்படுகிறதா என்பதைத் தீர்மானிக்க ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம் – என்றார்.

Related Posts