கோப்பாயில் விபத்து, மாகாண சபை உறுப்பினர் படுகாயம்!

sugirthan-tnaஇராச பாதை கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்று மாலை 3.30 மணிக்கு இடம் பெற்ற விபத்து இடம்பெற்றது.

மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தனது வாகனத்தில் இராசவீதியில் சென்று கொண்டிருந்தபோது ரிப்பர் வாகனம் ஒன்றை விலத்திச் செல்ல முற்பட்டவேளை விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது படுகாயம் அடைந்த சுகிர்தன் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Posts