Ad Widget

கோபியின் மனைவி வெளிநாடு செல்லத் தடை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க முனைகிறார் எனக் குற்றம்சாட்டடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் மனைவி சர்மிளா வெளிநாடு செல்வதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

gobi

சுவிற்சர்லாந்துக்கு செல்வதற்காக கோபியின் மனைவி சர்மிளா நேற்று ஞாயிற்றுக்கிழமை உரிய ஆவணங்களுடன் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு சென்றார் என்றும் அங்கு வைத்தே அதிகாரிகள் சுவிஸுக்கு செல்ல விடாமல் அவரைத் தடுத்து நிறத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவரிடம் சுவிஸ் செல்வதற்கான நுழைவிசைவு (விஸா) இருந்த போதிலும் அவரது கணவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதனாலேயே அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

சர்மிளாவை விமான நிலையத்திலேயே சிறிது நேரம் தடுத்து அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர். இதனை எதிர்த்து சுவிஸ் தூதரக அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாதடினர். இதன்போதே அவரின் கணவர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கின்றமையால் அவரை வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும் விமானநிலையத்தில் சர்மிளாவைபயங்கரவாத தடுப்பு பிரிவினர் துருவித் துருவி விசாரணைகளை மேற்கொண்டனர் என்றும் தெரியவருகிறது.

Related Posts