Ad Widget

கொழும்பிலிருந்து 1100 பேர் வடக்கு மாகாணத்திற்கு இரவோடு இரவாக அழைத்துவரப்பட்டனரா? எமக்கு தொியாது என்கிறார் மாகாண சுகாதார பணிப்பாளர்

கொழும்பிலிருந்து வடமாகாணத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு சுமார் 1100 பேர் அழைத்துவரப்பட்டமை தொடர்பாக தமக்கு எதுவும் தொியாது. என மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

கொழும்பு- பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை போன்ற பகுதிக ளை சேர்ந்தவர்கள் மற்றும் பாகிஸ்த்தானிலிருந்து நாடு திரும்பிய 1100 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். இரவோடு இரவாக இவர்கள் அழைத்துவரப்பட்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்த போது,

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வடக்கின் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு நேற்றிரவு ஆயிரத்துக்கும் அதிகமானோர் அழைத்துவரப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இராணுவத் தளபதியிடம் கேட்ட போது, விபரங்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்திடமும் பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிட்டார். ஆனால் திணைக்களத்திடம் அது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை மேலும், இராணுவ முகாம்களில் மேற்கொள்ளப்படுகின்ற தனிமைப்படுத்தல் விபரங்கள் எங்களுக்குத் தெரிவிக்கப்பட மாட்டாது” என சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Related Posts