Ad Widget

கொலை குற்றச்சாட்டு: மாணவனுக்கு பிணை

release_allயாழ். பாஷையூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 வயது மாணவக்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது.

23 வயதான இளைஞர் அல்பேட் பீரிஸ் கனிஸ் தயான் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட என்ற சம்வத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட மாணவனுக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

2012 டிசெம்பர் 29 ஆம் திகதி பாடசாலை மாணவி ஒருவரின் துவிச்சக்கர வண்டி சாவியினை சந்தேகநபர் கழற்றி விளையாடிய கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் சக மாணவனான அல்பேட் பீரிஸ் கனிஸ் தயான் மாணவியின் சாவியை கொடுக்குமாறு கேட்டபோதே அவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குறித்த சிறுவன் அன்றைய தினமே யாழ். பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சான்று பெற்ற சிறுவர் பாடசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையின் போது கத்தி குத்து காயத்தினால் ஏற்பட்ட இரத்தப் பெருக்கினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து சான்று பெற்ற பாடசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவனின் மேற்படி வழக்கினை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மாணவனை 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும், 2 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் செல்ல அனுமதித்ததுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் யாழ். பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும், யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் எஸ்.பரமராஜா உத்தரவிட்டார்.

Related Posts