Ad Widget

கொலைக் குற்றச்சாட்டில் கைதானவருக்கு 5 வருட கடூழிய சிறை

சுதுமலைப் பகுதியில் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நபருக்கு 5 வருடங்கள் கடூழிய சிறைதண்டனையும் 1 மில்லியன் ரூபாய் நட்டஈடும் விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (03) தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபரான முதலாவது சந்தேகநபரின் சகோதரன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில், சீவரத்தினம் லவன் (வயது 22) என்பவர் உயிரிழந்தார்.

இந்தக் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மானிப்பாய் பொலிஸார் சகோதரர்களான இரவீந்திரன் ஜெயச்சந்திரன் (வயது 30), இரவீந்திரன் கஜேந்திரன் (வயது 25) இருவரையும் கைது செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றில் நடைபெற்று, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இரவீந்திரன் கஜேந்திரன் என்பவரை குற்றமற்றவர் என்பதை இனங்கண்ட மன்று அவரை விடுதலை செய்தது.

முதலாவது எதிரியான இரவீந்திரன் ஜெயச்சந்திரன், சடுதியான கோபத்தில் ஏற்பட்ட கொலையாகாது. குற்றமுறையான மனித உயிர்ப்போக்கல் என்பதன் கீழ் இவருக்குத் தண்டனை வழங்கப்படுகின்றது.

நட்டஈட்டை உயிரிழந்தவர்களின் தந்தைக்குச் செலுத்த வேண்டும் என்பதுடன், அதனை செலுத்தா விட்டால் மேலும் 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts