Ad Widget

கொன்சலிற்றா வழக்கு பொலிஸாருக்கு இன்னும் அவகாசம் வேண்டுமாம்

கொன்சலிற்றா வழக்கு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.கொன்சலிற்றா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டரா இல்லையா என்பது குறித்த அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றிடம் கோரியதையடுத்து வழக்கு நவம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

jeromey-kurunagar

குருநகர் பெரியகோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி கொன்சலிற்றா சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

பெரியகோயிலில் உள்ள பாதிரியார்கள் இருவர் குறித்த மரணம் தொடர்பில் பெற்றோரினால் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

இதனையடுத்து நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று கொன்சலிற்றாவின் மரணம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டது என்று மருத்துவ அறிக்கையின் பிரகாரம் மன்று தீர்ப்பளித்தது.

அதனையடுத்து கொன்சலிற்றா இறப்பதற்கு முன்னர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாரா என்று விசாரணை மேற்கொண்டு நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாரிடம் உத்தரவிட்டிருந்தார்.

பொலிஸாரின் அறிக்கைக்காக இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும் விசாரணையினை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவை என மன்றிடம் கோரியதையடுத்து மேலும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Posts