Ad Widget

கையடக்க தொலைபேசி பாவனை அரைப் பைத்தியமாக்கியுள்ளது : சி.வி.விக்னேஸ்வரன்.

கையடக்க தொலைபேசி பாவனை மனிதனை அரைப் பைத்தியங்களாக வீதியில் உலாவரும் நிலைமைக்கு தள்ளியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். புத்தகத்திருவிழா நேற்று மாலை மாநகரசபை சுகாதாரப் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கையடக்க தொலைபேசி மனித மூளையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை உடனடியாக அறிந்து விட முடியாது எனவும், ஆனால் காலப் போக்கில் இதன் தாக்கங்கள் உணரப்படுகின்ற வேளையில் எமது மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அளவிட முடியாதவையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

தொலைபேசிப் பாவனை என்பது அவசரமான குறுகிய செய்திகளை விரைவாக தூரதேசத்திலுள்ள ஒருவருக்கு தெரியப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதனம் என முதலமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் அதன் பாவனைகள் திசைமாறிச் சென்று இப்போது உண்ண உணவில்லா விட்டாலும் பரவாயில்லை செல் இல்லாமல் சீவிக்க முடியாது என்ற நிலைக்கு மனித குலத்தை தள்ளியுள்ளதாகவும் மேலும் கூறினார்.

Related Posts