Ad Widget

கைது செய்யப்பட்ட யாழ். மாணவர்கள் புனர்வாழ்வு முடிந்ததும் கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவர்: யாழ்.கட்டளைத் தளபதி

Hathrusinga 001_CIவெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் புனர்வாழ்வுக் காலம் முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்தில் அவர்களது கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனாலும் மாணவர்கள் விடுதலையாகும் கால எல்லை குறித்து கூற முடியாது எனவும் தெரிவித்த ஹத்துருசிங்க, இது மாணவர்களின் நடவடிக்கையைப் பொறுத்தே அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தி நேசன் இணையத்தளத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய செவ்வி ஒன்றிலேயெ மேற்குறித்த விடயங்களை யாழ். படைத்தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த ஊடகத்துக்கு இது தொடர்பில் மேலும் தகவல் தெரிவித்துள்ள அவர்,

பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக அதிகார பூர்வ தகவல்களின் படி 90 வீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகம் மீளத் திறக்கப்பட்ட பின்னர் தமது கல்விச் செயற்பாடுகளுக்காக திரும்பியுள்ளனர்.

புனர்வாழ்வு பெற்றுவரும் மாணவர்கள் தொடர்பாக எந்த உறுதிமொழிகளும் பல்கலைக்கழக அதிகாரபூர்வ தரப்பால் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. புனர்வாழ்வு பெற்றுவரும் மாணவர்களின் நடவடிக்கைகள் மற்றும் சிந்தனைகளின் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே அவர்கள் விடுவிக்கப்படும் காலம் தீர்மானிக்கப்படும்.

புனர்வாழ்வுக்கான காலத்தை புனர்வாழ்வு மாணவர்களின் நடந்தைகளைப் பொறுத்து புனர்வாழ்வு முகாமுக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரியே தீர்மானிப்பார் எனவும் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் மட்டுமே தம்முடைய ஒரே தலைவர் என்ற சிந்தனை கைதாகியுள்ள 4 மாணவர்களிடமும் இருந்தது. ஆனால் தற்போது அவர்களுடைய சிந்தனையில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது எனவும் ஹத்துருசிங்க மேலும் கூறியுள்ளார்.

Related Posts