Ad Widget

கெற்பேலியில் முன்னைய இடத்தை; ராணுவம் கையளிக்க மறுத்ததால் கோயில் காணியில் மயானம்

35 வருடகாலமாக மக்களால் பாவிக்கப்பட்டு வந்த கெற்பேலி மயானத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளமையால் அதற்கு அருகிலுள்ள கோயில் காணியில் புதிய மயானத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் சி.துரைராஜா தெரிவித்தார்.

கெற்பேலி மக்களால் 1983 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்த மயானத்தை இராணுவத்தினர் படைமுகாம் அமைப்பதற்காக பெற்றுக் கொண்டுள்ளனர். காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியிலேயே மயானம் அமைக்கப்பட்டிருந்தது.

இதனால் குறித்த அரச காணியை படையினர் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் இருந்து நேரடியாகப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் மக்கள் குடிமனைப் பகுதியில் உள்ள இடம் ஒன்றை மயானமாகப் பயன்படுத்துமாறு படையினர் கோரியிருந்தனர். இதனை மக்கள் எதிர்த்த போதும் படையினர் மயானத்தை விடுவிக்க சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் சாவகச்சேரி பிரதேச சபையின் தலைவர் பொது மக்களுடன் விசேட சந்திப்பு நடத்தினர். இதன் பிரகாரம் படையினர் ஆக்கிரமித்த மயானக் காணிக்கு அண்மையாகவே தனியார் ஒருவரின் கோயில் காணியில் புதிய மயானம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சபைத் தலை வர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி
கெற்பேலி மயானத்தை மீட்டுத் தரக் கோரிக்கை; ஜனாதிபதிக்கு மக்கள் கடிதம்

Related Posts