Ad Widget

கூட்டுறவு பெரியார் வீரசிங்கத்தின் நினைவு தினம்

யாழ் மாவட்ட கூட்டுறவுச்சபையின் கூட்டுறவுப் பெரியார் அமரர் வி.வீரசிங்கத்தின் 49 ஆவது நினைவு தினமும் 91 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா பரிசில் வழங்கல் நிகழ்வும் இன்று காலை 10.00 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை தலைவர் திரு.தி.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

co-op-2013

தொடர்ந்து கௌரவ வட மாகாண சபை உறுப்பினர் திரு.சயந்தன் தனது உரையில் அடக்குமுறைகளுக்கு உட்பட்ட சமூகமாக இருந்த வேளையில் பொது மக்களுக்கு இக்கட்டான நேரங்களில் கை கொடுத்த கூட்டுறவு துறையின் நிலை தற்போது பரிதாபத்துக்குரியது. கூட்டுறவு என்றால் அதற்கொரு கூட்டுறவு சங்கம் ஊழியர்கள் இலாப நட்டம் போன்ற விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துவதைவிட அதற்கப்பால் தற்போது இருக்கும் சந்தை நிலவரத்திற்கேற்ப மாறவேண்டும். மேலும் இப்பொழுது வாடிக்கையாளர் சுவை மற்றும் சந்தைப்போட்டியின் தன்மை மாறி விட்டது என்பதையும் உணராமலும் புதிய வியாபார உக்திகளை திட்டமிடாலது மேற்கொள்ளாது இப்படியேயிருந்தால் கூட்டுறவு சங்கம் ஒரு போதும் வளர முடியாது என்றார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் இந்த கூட்டம் வெறுமனே ஒரு ஆரம்ப பாடசாலையில் இடம்பெறும் ஒரு பேச்சு போட்டியைப் போல் அல்லாமல் எங்கள் கூட்டுறவுச் சங்கங்கள் எல்லாவற்றையும் அடக்கியதான சம்பளத்திட்டம் வருங்கால திட்டங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்கும் ஒரு கூட்டுறவு மாநாடாக இடம்பெறவேண்டும் எனவும் தெரிவித்தார்.

மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கான கௌரவிப்பும் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக வட மாகாண தவிசாளர் திரு.சி.வி.கே.சிவஞானம் இலங்கைத் தேசிய கூட்டுறவு சபைத் தலைவர் திரு.லலித் ஏ பீரிஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் திரு.கே.சயந்தன், திரு.எஸ்.சுகிர்தன் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் வட மாகாண கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திருமதி.மதுமதி வசந்தகுமார் மக்கள் வங்கி பிரந்திய முகாமையாளர் திரு.கே.சுசீந்திரன் கூ.அ.உ.ஆணையாளர் திரு வீ.கே.அருந்தவநாதன் மக்கள் வங்கி முகாமையாளர் திரு.அ.பிரான்சிஸ் ஆகியோரும் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts