வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் இயங்கும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் காணப்படும் 20 கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (தரம் III) வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
முக்கிய விபரங்கள்:
-
பதவியின் பெயர்: கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (தரம் III)
-
வெற்றிடங்களின் எண்ணிக்கை: 20
-
விண்ணப்பிக்கும் கடைசித் திகதி: 2026 செப்டம்பர் 18
-
பரீட்சை நடைபெறும் காலம்: ஒக்ரோபர் 2026
-
சம்பள அளவுத்திட்டம்: MN 3 – 2025 (ரூபா 52,250 – 100,040)
-
பரீட்சைக் கட்டணம்: ரூபா 500/-
-
பரீட்சை மையங்கள்: யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி
தகைமைகள்:
-
வயதெல்லை: விண்ணப்ப முடிவுத் திகதியில் 18 வயதிற்கு குறையாமலும் 30 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
-
வதிவிடம்:
-
வடக்கு மாகாணத்தில் கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தது 3 ஆண்டுகள் தொடர்ச்சியான நிரந்தர வதிவிடம். அல்லது
-
விண்ணப்பதாரி அல்லது பெற்றோர் வடக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு, 5 ஆண்டுகள் தொடர்ச்சியான நிரந்தர வதிவிடத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
-
-
கல்வித் தகைமை:
-
க.பொ.த (சா/த): ஒரே அமர்வில் தமிழ்/சிங்களம்/ஆங்கிலம், கணிதம் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்தியுடன் (Credit Pass) மொத்தம் 6 பாடங்களில் சித்தி.
-
க.பொ.த (உ/த): ஒரே அமர்வில் வணிகப் பாடங்களில் (பொருளியல், விவசாயம், இணைந்த கணிதம், கணக்கியல், வணிகப் புள்ளிவிபரவியல், வணிகக் கல்வி) ஏதேனும் ஒரு பாடம் உள்ளடங்கலாக 3 பாடங்களில் சித்தி.
-
-
தொழில்சார் தகைமை (ஏதேனும் ஒன்று):
-
NICD (Polgolla) / PCTI இன் கூட்டுறவு தொடர்பான உயர் டிப்ளோமா/கற்கைநெறி.
-
AAT இறுதி மட்டம் (Final Stage) சித்தி.
-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணக்கியல் அல்லது முகாமைத்துவத்தில் டிப்ளோமா.
-
Chartered Accountancy இடைநிலைப் பரீட்சை சித்தி.
-
ATI இன் கணக்கீட்டில் 4 வருட உயர் டிப்ளோமா (HNDA) அல்லது வணிக நிர்வாகத்தில் 3 வருட டிப்ளோமா (HNDBA).
-
தெரிவு முறை:
எழுத்துப் பரீட்சை (பொது நுண்ணறிவுத் திறன் – 100 புள்ளிகள் & பொது அறிவு – 100 புள்ளிகள்) மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் புள்ளி அடிப்படையில் ஆட்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தினை www.np.gov.lk என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, 2026.09.18 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுக் தபாலில் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
முகவரி:
செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம்,
இல. 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
(குறிப்பு: கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “NP/07/10/01/235” எனக் குறிப்பிடப்பட வேண்டும்)