நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வற்காக இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோஷ தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று காலை கொழும்பில் நடைபெற்றதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டிற்கு வருகைதந்துள்ள தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோஷ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து, கலந்துரையாடியுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரில், தென்னாபிரிக்க உப ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நேற்று நாட்டை வந்தடைந்தனர். இக்குழுவினர் இன்று எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளதாகவும்.
அதனை தொடர்ந்து வடபகுதிக்கும் விஜயம் மேற்கொண்டு வட மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்