Ad Widget

கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு என்பதை வெளியிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்’

ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குகின்றது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

mavai mp in

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 25 வருடங்களாக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களுடன் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் மருதனார் மடம் விவசாய பயிற்சி கல்லூரி மண்டபத்தில் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (05) நடத்தியபோது, அதில் கலந்துகொண்டு மாவை தொடர்ந்து கருத்துக்கூறுகையில்,

கிராம மட்டங்கள் தோறும் சென்று மக்களுடைய கருத்துக்களை பெற்றுக்கொண்டு, அது தொடர்பில் கலந்துரையாடிய பின்னரே யாருக்கு ஆதரவு என்ற முடிவை பகிரங்கமாக வெளியிடுவோம். அதற்கிடையில் இரகசிய பேச்சுவார்த்தை, உடன்படிக்கை கைச்சாத்து என்று கூறுவதில் எவ்வித உண்மைகளும் இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான முடிவுகள் எதனையும் இதுவரையில் எடுக்கவில்லை. இந்நிலையில் இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவது கவலையளிக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தற்போது வெளியிட்டால் அது பாரதூரமான பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது சம்மந்தமான கலந்துரையாடல்கள் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னதாக வடக்கு கிழக்கு மாகாணங்களில், கிராம மட்டங்களில் இருந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மக்களுடைய கருத்துக்களை பெறவிருக்கின்றோம்.

அக்கருத்துக்களை கொண்டும் அனைத்து தரப்பினர்களுடன் கலந்தாலோசித்தே, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.

அவ்வாறு எடுக்கப்படும் முடிவும் பகிரங்கமாக அறிவிக்கப்படும் என மாவை கூறினார்.

Related Posts