Ad Widget

கூட்டமைப்பு – மு.கா சந்தித்து 13 சவால் குறித்து பேச்சு

slmc -tna-meetingஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையக காரியாலயமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அதன் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீ.ல.மு.கா செயலாளர் நாயகம் பா.உ ஹஸனலி, ஸ்ரீ.ல.மு.கா உச்ச பீட உறுப்பினர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓன்றரை மணித்தியாலம் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் தற்போதய அரசியல் சூழ்நிலை, சிறுபான்மை சமூகங்கள் அதிகார பகிர்வின் உச்ச பயன்களை அடையக்கூடிய வழிமுறைகள், 13ம் சட்ட திருத்தத்திற்கு ஏதிராக எழுந்துள்ள சவால்கள் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான பேச்சுக்களை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் வழமையாக நடாத்திவருகின்றது. அத்தோடு இவ்வாறான பேச்சுக்களை ஏனைய கட்சிகளுடன் நடாத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீர்மானித்துள்ளன.

Related Posts