Ad Widget

கூட்டமைப்பு கடந்த ஐந்து வருடத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்தவை ஏராளம் – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட காலத்தில் நாடாளுமன்றம், மற்றும் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்தவைகளை முன்வைத்தே வாக்குக் கேட்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கரவெட்டியில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே எம்.ஏசுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை என மன்னிப்புக்கேட்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வாக்குகளை கேட்கவில்லை என குறிப்பிட்ட எம்.ஏசுமந்திரன்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சர்வதேச விசாரணை என்கின்ற விடயம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும் என சுட்டிக்காட்டினார்.

சர்வதேச விசாரணை என்றால் என்ன என்கின்ற அடிப்படைகள் கூடத் தெரியாதவர்கள், அதைக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று அதனை புறம் தள்ள முயன்றதாக எம்.ஏசுமந்திரன் குறிப்பிட்டதோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேசத்துடன் தொடராக தொடர்புகளை மேற்கொண்டு, இறுதிப் போரில் நிகழ்ந்த விடயங்களை எடுத்துக் கூறியதன் விளைவாகவே சர்வதேச விசாரணை என்கின்ற விடயம் உருப்பெற்றதாக தெரிவித்தார்.

சர்வதேச விசாரணையை எதிர்த்தவர்கள், இன்று ஒரு வதந்திக்குப் பின்னாலே சென்று, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் என தெரிவித்த எம்.ஏசுமந்திரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை பொறுத்தவரை சர்வதேச விசாரணை என்கின்ற விடயத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டதோடு,தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் சர்வதேசத்தின் பங்களிப்பு கட்டாயம் என்பதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்

Related Posts