Ad Widget

குளியலறையில் இயங்கிவந்த ஜுஸ் உற்பத்தி நிலையம் யாழ். நீதிமன்றினால் சீல்!

யாழ். நகர்ப் பகுதியில் மிகவும் சுகாதாரச் சீர்கேடான முறையில் இயங்கி வந்த ஜுஸ் உற்பத்தி நிலையம் யாழ். நீதிமன்றினால் சீல் வைத்து மூடப்பட்டது.

அண்மையில் இந்த உற்பத்தி நிலையத்தைச் சுற்றிவளைத்த சுகாதாரத் திணைக்களத்தின் விசேட குழுவினர், இங்கு மிகவும் சுகாதாரச் சீர்கேடான முறையில் ஜுஸ் உற்பத்தி நடைபெறுவதைக் கண்டுபிடித்தனர்.

சிறிய வீடு ஒன்றில் தொலைத்தொடர்பு நிலையம், புகைப்பட நிலையம் என்பவற்றுடன் குளியலறையில் ஜுஸ் உற்பத்தியும் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இங்கு அசுத்தமான நீரில் மருத்துவச் சான்றிதழ் எதுவும் பெறப்படாமல் உற்பத்தி நடைபெற்று வந்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது மனிதப் பாவனைக்கு உதவாத பெருமளவிலான ஜுஸ் பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஜுஸ் உற்பத்திக்குப் பாவிக்கப்படும் வாசனைத் திரவியம் கிருமிநாசினிப் போத்தலில் சேமிக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறான உற்பத்திப் பொருள்களால் பெரும்பாலும் சிறுவர்களே பாதிப்படைகின்றனர் எனவும் இவ்வாறான தொடர் நடவடிக்கைகளை விரைவாக நடத்தும் படியும் வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.

juice-1

juice-2

juice-3

Related Posts