Ad Widget

குருநகர் இறங்குதுறை வேலைத்திட்டம் டிசம்பரில் ஆரம்பம்

குருநகர் மீன்பிடி இறங்குதுறை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பிரதி பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை (14) தெரிவித்தார்.

இந்த இறங்குதுறையானது, கடற்றொழில் சார்ந்த வெளிநாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் 2010ஆம் ஆண்டு மேற்கொள்வதற்கான முனைப்புகள் ஏற்படுத்தப்பட்ட போதும், பல தடங்கல்களால் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் பணிப்பின் பேரில், இறங்குதுறை பகுதியை ஆய்வு செய்வதற்கான சுற்றுச்சூழல் நிபுணர் குழு, இன்று ஞாயிற்றுக்கிழமை (14) குருநகர் பகுதிக்கு விஜயம் செய்து அந்த பகுதியை பார்வையிட்டது.

இறங்குதுறை அமைப்பதற்கான இடத்தை பார்வையிடுவதல், மற்றும் இறங்குதுறை அமைப்பதற்கான இறுதி ஆய்வு அறிக்கையை தயாரித்தல் ஆகிய நோக்கங்களுக்காகவும், இறங்குதுறை அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்படுமா என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்காகவும் இந்த குழு வருகை தந்திருந்ததாக அவர் கூறினார்கள்.

இந்த இறங்குதுறை எத்தனை மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பது தொடர்பாக விபரங்கள் இன்னமும் தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts