Ad Widget

குப்பைகளின் மத்தியில் பிரதேச சபை அலுவலகங்கள்

Kuppaiகரவெட்டிப் பிரதேச சபையின் பிரதான அலுவலகம், உப அலுவலகங்கள், பொதுச் சந்தை, நூல் நிலையம் என்பனவற்றில் குப்பைகூளங்கள் நிரம்பி அசுத்தமாக இருப்பதாக சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் உப தலைவர் இ.சாந்தசொரூபன் தலைமையில் நடைபெற்ற போது ஆளும்கட்சி உறுப்பினர்களான கே.பரஞ்சோதி, பொ.தம்பிமுத்து ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

குறித்த இடங்களில் குப்பைகூளங்கள் காணப்படுகின்றன. பிரதான அலுவலகத்தின் பின்புறமாக குப்பை கூளங்கள் நிறைந்துள்ளன. பொதுச் சந்தை, நூல் நிலையம், உப அலுவலகங்களிலும் இதேநிலையில் குப்பைகள் காணப்படுகின்றன. குப்பை கூளங்களை அப்புறப்படுத்தி குறித்த இடங்களை பிரதேச சபை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மற்றொரு ஆளும்கட்சி உறுப்பினரான பொ.குகதாஸ் கருத்துத் தெரிவிக்கையில்: சபையில் வேலைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் கூட்டங்கள் நடைபெறும் போது சமுகமளிக்க வேண்டும். சபை வேலைகள் தொடர்பாக இங்கு கேள்வி எழுப்பப்படும் போது அந்த வேலைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

இதே போல குப்பை கூளங்களை அகற்றுவதற்குப் பொறுப்பான உத்தியோகத்தரும் சமுகமளிக்க வேண்டும். அப்போதுதான் சபையின் வேலைகள் சரியாக நடைபெறுகிறதா என அறிந்து கொள்ள முடியும். இதனை ஒரு தீர்மானமாக சபை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Related Posts