2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைதியான புரட்சியை பின்னோக்கி இழுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாத்தறை தொடகமவில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வைபவத்தின் போது தெரிவித்தார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை-ஹம்பாந்தோட்டை பகுதிக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்துவிட்டு அங்கு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான், அரசியலுக்குள் இடையில் நுழைந்தவன் அல்ல. எனக்கு 49 வருடகால அரசியல் அனுபவம் இருக்கின்றது. கட்சி தீர்மானத்தின் போது ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்பட்ட மேம்பாட்டுக்கு பங்கம் ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டேன்.
அதனை நான் பாதுகாப்பேன். இந்நாட்டில் வாழ்கின்ற சகலருக்கும் நியாயம் மற்றும் நீதி கிடைப்பதற்கு வழிசமைத்து, குடும்ப ஆட்சியின்றி நல்லாட்சியை உருவாக்குவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.