Ad Widget

குடா நாட்டில் வெளிநாட்டு ஜோடி உட்பட 8பேர் கைது!

jail-arrest-crimeநேற்றும் இன்றும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஜோடியினர் உட்பட 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு ஜோடி கைது
வெளிநாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவில் வந்த சுவிஸ் நாட்டுப் பிரஜைகளான இருவர், யாழ் கோட்டைப் பகுதியில் அரை நிர்வாண கோணத்தில் உல்லாசமாக இருந்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொது இடத்தில் அநாகரியமான முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும் பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் விதமாக நடந்து கொண்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கணவன் மனைவி எனக் குறிப்பிடுகின்ற வேளை அதனை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் இவர்களிடம் இல்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.

பொது இடத்தில் மது அருந்திய அரச ஊழியர் உட்பட நால்வர் பேர் கைது

சுன்னாகம் பிரதேசத்தில் மதுபானம் அருந்திய அரச ஊழியர் உட்பட 04 பேரை சுன்னாகம் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இவர்கள் சுன்னாகத்தில் பொது இடத்தில் பகல் வேளையில் மதுபானம் அருந்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் மேற்கு பூதராயர் கோவிலடி பகுதியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது, பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் இவர்களை கைதுசெய்தனர். .

முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களில் வந்த இளைஞர்களே மது அருந்திக் கொண்டிருந்தனர் எனவும் முச்சக்கர வண்டியில் வந்தவாகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் இன்று சுன்னாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

ஆட்டோவில் போதைப் பொருளைக் கடத்த முயன்ற இருவர் கைது

யாழ்.நகரப்பகுதியில் ஆட்டே ஒன்றில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆட்டே ஒன்றில் தென்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப் பொருளை விற்பனைக்காக இன்று அதிகாலை வேளையில் வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் வழியில் வீதிப் போக்குவரத்து கடடையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாரிடம் சிக்கினர்.

குறித்த ஆட்டே சாரதி உட்பட இன்னொருவர் போதைப் பொருளுடம் தப்பியோட முற்பட்ட வேளை இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ் ஜந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக யாழ் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts