Ad Widget

கிளிநொச்சியில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய உழவர் பெருவிழா

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடாத்திய உழவர் பெருவிழா நேற்று சனிக்கிழமை (18.01.2014) கிளிநொச்சியில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது.

13

2013ஆம் ஆண்டுக்கான சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களையும் பாற்பண்ணையாளர்களையும் தெரிவு செய்வதற்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களைக் கௌரவிக்கும் முகமாக நடாத்தப்பட்ட இவ்விழா கிளிநொச்சி கூட்டுறவுக் கலாசாரமண்டபத்தில் நடைபெற்றது.

20

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதல்வர் க.வி விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்.பல்கலைக்கழக விவசாயபீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் கு.மிகுந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், ந.சிவசக்தி ஆனந்தன், மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாணச் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

14

தழிழகத்திலிருந்து வருகைதந்திருந்த கவிஞர் யுகபாரதி தலைமையில் உழவே எங்கள் உயிர் என்ற தலைப்பில் கவியரங்கமும், வவுனியா நிருத்திக நிகேத கலாமன்ற மாணவ மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மண்டபம் கொள்ளாத அளவுக்கு ஆயிரக்கணக்கான விவசாயப் பெருமக்கள் பார்வையாளர்களாக ஆர்வத்தோடு பங்கேற்றிருந்தனர்.

04

2008ஆம் ஆண்டுக்குப் பிறகு கிளிநொச்சியில் மிக அதிக எண்ணிக்கையானோர் திரண்டிருந்த ஒரு பெருவிழாவாக இது கருதப்படுகிறது.

Related Posts