Ad Widget

கிராம அலுவலரின் ஆவணங்கள் அழிப்பு; சந்தேகநபர்கள் தலைமறைவு

jail-arrest-crimeவழக்கிற்கு செல்லாத நபர்களை கிராம அலுவலர் வழக்கிற்கு செல்லுமாறு கூறுவதற்கு அழைத்தமைக்காக கிராம சேவையாளரின் ஆவணங்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் நேற்று புங்குடுதீவில் நடைபெற்றுள்ளது.

புங்குடுதீவு 1 ஆம் வட்டாரம் ஜே/26 கிராம அலுவலரின் ஆவணங்களே இவ்வாறு கிழித்தெறியப்பட்டுள்ளன. அதே இடத்தினைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இவரும், மதுபோதையில் சென்று நேற்று 2 மணியளவில் கிராம அலுவலரின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கிராம அலுவலரின் ஆவணங்களை கிழித்து விட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, குறித்த கிராம அலுவலர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

அம்முறைப்பாட்டில், குறித்த இருவரும் நீதிமன்ற வழக்கிற்கு செல்லவில்லை என நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவரையும் சந்திக்குமாறு கூறிய வேளையில் இருவரும், தனது அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்து தமது ஆவணங்களை கிழித்து வீசியதாக குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் வினவிய போது, சந்தேக நபர்கள் இருவரையும் குறித்த பிரதேசத்தில் காணவில்லை என்றும் இருவரையும் தேடி வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

Related Posts