Ad Widget

கால்நடைகளுக்கான புற்கள் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு மானிய ஊக்குவிப்பு

beef_cattleகால்நடைகளுக்கான புற்கள் வளர்ப்பில் ஈடுபடும் தொழில்முயற்சியாளர்களுக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சுற்று நிரூபம் கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி திணைக்களத்தினால் அனைத்து மாகாணப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இச்சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘புல் வளர்பபை ஒரு தொழிலாக ஆக்கக் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கேனும் மேற்கொள்ளக்கூடியவர்களாக உரியவர்கள் காணப்பட வேண்டும்.

இதற்கான நிலத்தைக்கொண்டு இருப்பதுடன் புல் வளர்ப்பில் ஆர்வம் உடையவராகவும் ஓரளவேனும் அனுபவம் உடையவராகவும் காணப்படவேண்டும்.

மேற்படி தகைமைகளை கொண்டவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு உட்பட்ட 50 வீத மானியம் வழங்கப்படவுள்ளது.

இதற்கமைவாக, புல் நடுகைப் பொருட்கள், புற்தண்டு அல்லது செடி, நீர் இறைக்கும் இயந்திரம், நீர் தெளிக்கும் உபகரணம், புல் வெட்டும் இயந்திரம், புல் துண்டமாக்கும் இயந்திரம் என்பன வழங்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts