Ad Widget

காலநிலை தொடர்பாக மீண்டுமொரு எச்சரிக்கை!!

நாட்டை சுற்றி கடற்பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

விசேடமாக புத்தளம் , மன்னார் , காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் .

தீவை சுற்றி மற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக , அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலார்கள் மற்றும் கடற்படை தரப்பினரிடம் கோரப்பட்டுள்ளது.

நாட்டின் மேல், வடமேல்,தெற்கு , மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பிற்பகல் மழை பெய்யக்கூடும் இன வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts