Ad Widget

காரைநகரில் வாழ்க்கைத்தரம் உயர்ந்தவர்களின் சமுர்த்தி முத்திரைகளை நிறுத்த ஏற்பாடு

Samurdhiகாரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்க்கைத்தரம் உயர்ந்த சமுர்த்திப் பயனாளிகளின் சமுர்த்தி நிவாரண முத்திரைகள் நிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை அப்பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்திப் பயனாளிகளின் முத்திரைகளை மீளாய்வு செய்யும் செயற்பாடுகள் கடந்த வாரம் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.

கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இம்மீளாய்வை உதவித் திட்டப் பணிப்பாளர் மற்றும் சமுர்த்தி ஆர்வலர்கள், சமுர்த்தி முகாமையாளர்களை உள்ளடக்கிய குழு மேற்கொண்டது.

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 1,881 சமுர்த்திப் பயனாளிகள் சமுர்த்தி முத்திரைகளை பெற்றுவருகின்றனர்.

இவர்களில் கடந்த காலத்தில் அரசாங்கத் தொழிலைப் பெற்றவர்கள், குடும்ப மட்டத்தில் வருமானம் அதிகரித்தவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்றவர்களென பலருடைய வருமான மட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மறுபக்கம் தொழில் இழந்தவர்கள், குடும்பத் தலைவனை இழந்து வருமானமின்றியுள்ளவர்கள் காணப்படும் நிலையில் இத்தகைய மீளாய்வின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நன்மையடையக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts