காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்!

சட்ட விரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி கிளிநொச்சி, பொன்நகர் கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்நகர் பகுதியில் அமைந்துள்ள காணிகளை அரச அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து, தமக்கு விரும்பியவர்களுக்கு வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டிவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பித்து கரைச்சி பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகம் முன்பாக சென்று நிறைவடைந்தது.

மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனின் பார்வைக்காக மகஜர் ஒன்றும் மேலதிகஅரசாங்க அதிபர் ஸ்ரீமோகனிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

Related Posts