Ad Widget

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.4 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மண்டைத்தீவைச்சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுரேந்திரன் சுதந்தினி என்பவரே புதன் கிழமை காணாமல் போனதாகவும் அவரே வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் சடலம் மண்டைத்தீவு வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவ தாவது, நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மணிய ளவில் கடைக்குச் செல்வதற்காக தாய் வீட்டி லிருந்து வெளியில் சென்றவேளை குறித்த சிறுமி தாய்க்குப் பின்னால் சென்றுள்ளார்.

எனினும் பிள்ளையை வீட்டிற்குச் சென்று தந்தையுடன் இருக்குமாறு திருப்பி அனுப்பிய தாய் கடைக் குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் பிள்ளையைக் காணவில்லை. அதேநேரம் பிள்ளை தாயுடன் சென்ற தாக தந்தை நினைத்திருந்தார். பிள்ளையைக் காணாது அதிர்ந்துபோன பெற்றோர் பிள்ளையை தேடத் தொடங்கினார்கள். இந்நிலையில் நேற்று மதியம் மண்டைதீவு கடற்கரை வீதிக்கு அண்மையில் உள்ள தோட்டக் கிணற்றில் சடலம் காணப்படுவது கண்டறியப்பட்டது.

நான்கு பக்கமும் வேலி இடப்பட்டிருந்த தோட்டக் காணியில் உள்ள கிணற்றில் பிரஸ் தாப சிறுமி விழுவதற்கான சாத்தியம் இல்லா ததை அடுத்து சிறுமியின் மரணத்தில் சந்தேகம் கொண்ட ஊர்காவற்றுறைப் பொலி ஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்தை ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்ற நீதவான் நேரில் சென்று பார்வை யிட்டார். யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சி.சிவரூபன், தட யப் பரிசோதனை நிபுணர்கள், ஊர்காவற் றுறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப் பகுதி கிராம உத்தியோகத்தர் இ.ரமேஸ் ஆகியோர் அங்கு பிரசன்னமாகி இருந்தனர்.

சட்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்தில் மேற்கொண்ட ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளில், பிரஸ்தாப சிறுமி நீரில் மூழ்கி இறக்கவில்லை எனவும் அவர் கொலை செய் யப்பட்டுள்ளார் என்பதையும் உறுதி செய்தார்.கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லையாயினும், மேலதிக தகவல்களை அறிவதற்காக மருத்துவ பரிசோதனையின் பொருட்டு சிறுமியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை ஒப்படைக் கப்பட்டுள்ளது. முழுமையான மருத்துவ பரிசோதனை யின் பின்பே சிறுமியின் உடலில் காணப் படும் தாக்கங்கள் பற்றி கூறமுடியும் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Related Posts