இலங்கையின் 68வது சுதந்திர தினமான நேற்று காணமால் போனவர்களின் குடும்ப உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
கறுப்பு நிற துணிகளால் தமது வாய்களை அடைத்தவாறு வவுனியா நகர சபைக்கு முன்னாள் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
போரின் போது இராணுவத்திடம் கையளி்க்கப்பட்ட தமது உறவுகளை எங்கே என்று எழுதப்பாட்ட பதாகைகளை இவர்கள் ஏந்தியிருந்தனர்.
அத்துடன் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கவும் இவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் காணமால் போன குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் லயன் ஏ. செல்வேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உருப்பினர் பா.அரியநேந்திரன், காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
