Ad Widget

காணாமற் போனோரின் குடும்பங்களின் உளச் சுகாதாரத் தேவைகளைத் தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல்

காணாமற் போனோரின் குடும்பங்களிடையே உள்ள உளச் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான திட்டங்களை உளச்சுகாதார நிபுணர்கள் கலந்துரையாடல்

10062014

சுகாதார அமைச்சு, தேசிய உளச் சுகாதார நிறுவனம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகியவற்றுடன் இணைந்து காணாமற் போனோர் ஆணைக்குழு அண்மையில் நிபுணர்களுடன் ஒன்றினைந்து கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

காணாமற் போனோரின் குடும்பங்களின் உளச் சுகாதாரத் தேவைகளைத் தீர்ப்பது தொடர்பாக ஏற்கனவே காணப்படும் செயலமைப்புக்களுடன் கூட்டிணைந்து புதிய திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கொடையிலுள்ள தேசிய உளச் சுகாதார நிறுவனத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அரசாங்க நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் உட்பட பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஏற்கனவே காணப்படும் வளங்களை அடையாளம் காண்பது தொடர்பான முக்கியத்தை பங்குபற்றுநர்கள் சுட்டிக்காட்டினர்.

சமூகப் பங்குபற்றுதலை ஊக்குவிப்பது தொடர்பான முறைகளையும் நிபுணர்கள் கலந்துரையாடினர்.
கூட்டத்தில் பங்குகொண்ட பேச்சாளர்களில், காணாமற் போனோர் ஆணைக்குழுவின் செயலாளர் திரு. எச்.டபிள்யூ. குணதாச, சுகாதார அமைச்சின் உளச் சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர். றசாஞ்சலி ஹெட்டியாராய்ச்சி, தேசிய உளச் சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர். ஜெயான் மென்டிஸ், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளின் பிரதித் தலைவர் திரு. டேவிட் கியூஸ்னி ஆகியோர் உள்ளடங்குவர்.

காணாமற் போனோரின் குடும்பங்கள் சந்திக்கும் விசேடமான விடயங்கள் குறித்தான புரிந்துகொள்ளலின் முக்கியத்தைச் சுட்டிக் காட்டுவதில் பேச்சாளர்கள் ஒருமித்திருந்தனர். அவர்களது சூழ்நிலையால் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வெவ்வேறான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக உதவுதல், அவர்களுக்குத் தேவைப்படும் உளவியல் ரீதியான உதவிகளைப் பலப்படுத்தி உதவுதல் ஆகியவற்றை பயன்படுத்தப்படும் திட்டங்கள் குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து வந்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள், சமூக சேவைகள் அமைச்சின் அலுவலர்கள், வடக்குஇகிழக்கு மாகாணங்களில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்குபற்றியவர்களில் உள்ளடங்குவர்.

Related Posts