Ad Widget

காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு செயற்பாடுகள் நிறைவு

KKS-harbourகாங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு செயற்பாடு பூரணப்படுத்தப்பட்டு கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இலங்கை துறைமுக அதிகாரசபை முகாமைத்துவப் பணிப்பாளர் நிஹால் ஹெப்பிட்டிப்பொல, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தாவிடம் நிறைவேற்றப்பட்ட செயற்திட்ட அறிக்கையினைச் சம்பிரதாயபூர்வமாக கையளித்து வைத்தார்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புச் செயற்பாடுகள் 25 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது.

மேலதிக துறைமுக வேலைகளைத் திட்டங்களைச் செய்வதற்காக இந்திய அரசாங்கம் 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடனடிப்படையில் வழங்கவுள்ளதாக இலங்கைக்கான இந்தியத்தூதுவர் அசோக் கே காந்தா கூறினார்.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதி பிராந்திய தளபதி சந்தன விமலதுங்க, கேணல் உபுல் அபயரத்தன, தளபதி புத்திக லியகமஹே உட்பட கடற்படை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts