Ad Widget

காங்கேசன்துறை துறைமுகத்தை ஆழமாக்கும் பணி ஆரம்பம்

KKS-kabar-carbar-seeகாங்கேசன்துறை துறைமுகத்தை ஆழமாக்கும் பணி நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இந்த ஆழமாக்கும் பணியை மேற்கொள்ளவதற்கு இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று காங்கேசன்துறை முகத்திற்கு நேற்று வந்தடைந்துள்ளதாக யாழ்.இந்திய துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணி இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை துறைமுகப் பகுதியில் மூழ்கியிருந்த கடற்கலங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பெரிய கப்பல்களை உள்வாங்கும் நோக்கில் துறைமுகத்தினை 8 அடி ஆழமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணியை மேற்கொள்வதற்கு நேற்று வெள்ளிக்கிழமை 2 மணிக்கு இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் 15 நாட்கள் இந்த ஆழமாக்கும் பணி நடைபெறவுள்ளதாகவும் இந்திய துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆழமாக்கும் பணியை இந்திய தூதரக அதிகாரிகள், கடற்படையினர் உத்தியோக பூர்வமாக ஆரமிபித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts