Ad Widget

காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியாவிடம் கடன்?

kankesanthuraiவர்த்தக நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை, இந்தியாவிடமிருந்து 44.3 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறவுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

யுத்தத்தின்போது உண்டான சேதங்கள் காரணமாக பல தசாப்தங்களாக அது முழு அளவில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. யுத்தத்தின்போது அழிக்கப்பட்ட கப்பல்களின் பகுதிகளும் இங்கு உள்ளன.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின் இந்தியா வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்த துறைமுகத்தை புனரமைக்க உதவி செய்வதாக உறுதியளித்திருந்தது.

இந்தியா இந்தத் திட்டத்துக்கு நன்கொடை மற்றும் சலுகை அடிப்படையிலான உதவியை வழங்கப்போவதாக கூறியிருந்தது. இது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் 21ஆம் திகதி ஜுலை மாதம் 2011ஆம் ஆண்டு கைச்சாத்தானது. முதற்கட்ட வேலைகளுக்காக இந்தியா 20 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஒப்புக்கொண்டது.

மண்வாருதலின் இரண்டாம் கட்ட வேலையை ஒரு இந்திய கம்பனி இன்று தொடங்கவுள்ளது. அலைத்தடை அணையை புனரமைக்கவும் இறங்குதுறை ஒன்றை அமைக்கவும் கடன் பெறப்படும் என துறைமுக அபிவிருத்தி அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

‘நாம் இந்தக் கடனை பெறவுள்ளோம். வட்டி வீதம் பற்றி பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இது சலுகை அடிப்படையிலான கடனாக இருக்கும் என நாம் நம்புகின்றோம்’ என அவர் கூறினார்.

Related Posts