Ad Widget

கழிவுகள் கொட்டுவதை நிறுத்த கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாநகர சபையால் சேகரிக்கப்படும் கழிவுகளை காக்கைதீவு மற்றும் கல்லுண்டாய் பகுதிகளில் கொட்டுவதை உடன் நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை (15) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

article_1423984531-DSC_0031

கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘நீங்கள் ஏ.சி.யில் நாங்கள் மலக்கழிவுகளுக்கு மத்தியிலா’, ‘மாநகர சபையே குப்பை கொட்டுவதற்கு வேறு இடம் தேடு’, ‘சுன்னாகத்தில் கழிவு ஒயில், கல்லுண்டாயின் மனிதக்கழிவா’ போன்ற வாசகங்களை தாங்கிய சுலோக அட்டைகளுடன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பகுதி 15 வருடத்துக்கு முன்பு உப்பளமாக இருந்தது, தற்போது குப்பை மேடாக காட்சியளிக்கின்றது. இங்கு முன்பு குப்பைகள் மட்டும் கொட்டப்பட்டது. ஆனால் தற்போது மனித கழிவுகளும் கொட்டப்படுகிறது.

இதனால் பிள்ளைகள் பல நோய்களுக்கு உள்ளாவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். இப்பகுதிக்குள் மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகள் இறந்து போவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

கழிவு கொட்டுவதற்காக அப்பகுதிக்கு வந்த மாநகர சபை வாகனங்களை மக்கள் தடுத்தபோது, பொலிஸார் வாகனங்களை விடுவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த மக்கள் கழிவு கொட்ட உட்செல்லும் பாதையின் வாயிலை மின்கம்பத்தால் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Related Posts