Ad Widget

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது

exam_deptகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது. கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்கு சுமார் மூன்று லட்சம் மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர்.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணைய தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுவோருக்கு பரீட்டைகள் திணைக்களத்தினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

1. உங்களது பெறுபேற்றினைத் தெரிந்து கொள்வதற்கு உங்களது பரீட்சைச் சுட்டெண்ணைத் திருத்தமாக உட்படுத்துக. வேறொரு சுட்டெண்ணை உட்படுத்துவதால் வேறொருவரது பெயரும் பெறுபேறும் பெறப்படும்.

2. இப்பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகளோ விசாரணைகளோ இருப்பின் இலங்கை பரீட்சைத்திணைகளத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.

1911- 24 மணிநேரசேவை
011-2784208, 011-2784537, 011-3140314, 011-3188350
தொலைநகல்: 011 2784422
மின்னஞ்சல்: exams@doenets

இதே வேளை

யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேருக்கு 9A

இப்பரீட்சைக்கு தோற்றியிருந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சோ்ந்த 18 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்குரிய கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ். இந்துக் கல்லூரி சார்பாக 239 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள்.

இம் மாணவர்களில் 18 மாணவர்கள் 9A சித்தியினையும், 37 மாணவர்கள் 8A சித்தியினையும், 13 மாணவர்கள் 7A சித்தியினையும் பெற்றுக்கொண்டார்கள்.

(மேலதிக தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்)

Related Posts