Ad Widget

கருணா குழு எனக்கூறியே மகனை கடத்தினர், தாய் சாட்சியம்

ssss1423தாங்கள் கருணா குழுவைச் சேர்ந்தோர் என்றும் விசாரணைக்காகவே அழைத்து செல்வதாகவும் கூறி தங்களின் தெளிவில்லாத தொடர்பு அட்டை ஒன்றிணை தந்துவிட்டு 2006 ஆம் ஆண்டு என் மகனை ஒரு குழுவினர் அழைத்துச்சென்றனர். அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்ட என் மகனை இன்று வரையிலும் காணவில்லை என்று அவரது தாயாரான பிரேமபாலன் உதயரஜனி நேற்று சாட்சியமளித்தார்.

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை நேற்று மேற்கொண்டனர்.

இதில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். கோப்பாய் இருபாலை பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு 7 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த 2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7 ஆம் திகதி இரவு 12.30 மணியளவில் வாகனத்தில் வந்து தனது மகனான பிரேமபாலன் திலீபன் (25) என்பவரை அழைத்தனர்.

வீட்டிற்கு நுழைந்த மேற்படி குழுவினர் தன் மகனை கொண்டுசெல்ல முற்பட்ட வேளை, தாங்கள் மகனை கொண்டு போக வேண்டாம் என தடுத்தோம்.

அப்போது அவர்கள் கூறினார்கள் ‘தாங்கள் உங்கள் மகனை விசாரணைக்காக அழைத்து செல்கின்றோம். விசாரணையின் பின்னர் உங்கள் மகனை விட்டுவிடுவோம் எனவும் கூறியும் தாங்கள் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தி விட்டு, தங்களின் தெளிவில்லாத தொடர்பு அட்டை ஒன்றிணையும் தந்திருந்தார்கள்’ என தாயார் கூறினார்.

அதற்கு பின்னர் தனது மகனை பற்றி எந்த தகவலும் இன்று வரை கிடைக்கவில்லையென தனது மகனை மீட்டுத் தாருங்கள் எனவும் அவரது தாயார் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.

Related Posts