Ad Widget

கமலேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

Kamalவடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசனின் கொலையின் பிரதான குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரனின் வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை (08) ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது, கந்தசாமி கமலேந்திரன் மற்றும் டானியல் றெக்ஷிசனின் மனைவி மற்றும் மற்றைய இளைஞர் ஆகியோரை எதிர்வரும் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி வழக்கு கடந்த ஜுன் மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ‘றெஷிசன் கொலை தொடர்பில் கமலேந்திரனிடம் அனைத்து விசாரணைகளும் நிறைவுபெற்றுள்ளதாக’ குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

அத்துடன் றெக்ஷிசனின் மனைவி மற்றும் மேலும் ஒரு இளைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts